தமிழர்களின் இதய பூமியையும் திட்டமிட்டு பறித்த இலங்கையின் நல்லாட்ச்சி அரசாங்கம்!!
முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் மகாவலி அபிவிருத்திச் சபை ஊடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு என்றுமில்லாத அளவில் அதிகரித்துவருகின்றது.
முல்லை மாவட்ட புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அடங்கிய மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது
இதேவேளை தமிழ் மக்கள் பேரவை,வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் என்பவையும் தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன.
தமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாற்றுப் பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் மாகாவலி அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்தப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் மூலம் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் சிங்களமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு”
ஜனநாயக ரீதியாக உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒனறு சேருங்கள்.
காலம் : 28.08.2018
நேரம் : 11.00 AM
இடம் : PWD சந்தியில் இருந்து முல்லை மாவட்ட செயலகம் வரை
--மகாவலி எதிர்ப்பு தமிழா் மரபுரிமைப் பேரவை--
No comments