விசேட செய்திகள்

திருகோணமலையில் கள்ள சாராய உற்பத்தி வீதம் அதிகரிப்பு! காரணம் என்ன?

திருகோணமலையின் மூதுர் பிரதேச சபைக்கு உட்பட்ட மனற்சேனை,பெரியவெளி,மற்றும் பாலத்தடிச்சேனை ஆகிய கிராமங்களில் கள்ள களவாக உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தின் அளவு அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேற்ப்படி கிராமங்கள் யுத்தின் போது பாதிக்கப்பட்ட போதிலும் யுத்தத்திர்க்கு  முன்னதான காலத்தை விட தற்ப்போது அதிகளவாக கள்ள சாராய  உற்பத்தி அதிகரித்துள்மை மனவேதனைக்கு உரிய விடயமாகும்.

இப்பிரதேசங்களில் தற்போது மது பாவனை அதிகரித்துள்ளதனால் வேறு பிரதேங்களில் இருந்து வரும் நபர்கள் மதுவை அருந்தி விட்டு  பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் சேட்டைகள் இடம் பெறுவதாகவும்  இதனால் இனமுரன்பாடுகள் இடம் பெறுவதர்க்கான வாய்ப்புக்கள் தோன்றுவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பிரதேங்களிள் இடம் பெறுகின்ற இப்படியான குற்றச்செயல்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கின்ற போதிலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்பிரதேசத்தில் இடம் பெறும் இப்படியான சம்பவங்கள் சட்டத்திர்க்கு உரிய குற்றம் ஆகும். எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிக தால்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

   

No comments