கிம் - டிரம்ப் சந்திப்பிற்கு சிங்கப்பூர் செலவிடும் தொகை இவ்வளவா
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரின் சந்திப்பிற்காக சிங்கப்பூர் செலவிடும் தொகை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் எதிர்வரும் 12-ஆம் திகதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் முதன் முறையாக சந்தித்து பேச உள்ளனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பிற்காக சிங்கப்பூர் அரசு சுமார் 20 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக அந்த நாட்டின் முதலமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த தொகையனது சர்வதேச சமூகத்திற்காக விருப்பப்பட்டு செலவிடுவதாகவும் இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments