ரயிலில் மாணவிக்கு நடந்த விபரீதம்! முதியவரின் கீழ்தரமான செயல்
ஓடும் ரயிலில், கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கர்நாடகா முதியவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
பாலியல் தொந்தரவு
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுஜாதன் (வயது -58) யஷ்வந்த்பூரில் இருந்து கொச்சுவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.
அதே பெட்டியில், பெங்களூரை சேர்ந்த கல்லுாரி மாணவி சவுமியா (வயது -21) பயணம் செய்தார். நள்ளிரவில் சுஜாதன் சவுமியாவுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையடுத்து மாணவி ஈரோடு ரயில்வே பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் சுஜாதனுக்கு ஓராண்டு சிறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
No comments