கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷாபி நகர் பகுதியில் நேற்று (08) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார் எனவும், அவரிமிருந்து 20 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாகவும், மூதூர் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
சந்தேகநபரை, மூதூர் பொலிஸில் தடுத்து வைத்துள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments