விசேட செய்திகள்

தமிழர்களிடம் ஆயுதங்கள் உள்ளது. மீண்டும் யுத்தம் வெடிக்கும் அபாயம் : எச்சரித்த தலைமை பிக்குகள் சங்கம்.









தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ந்தும்ஏராளமான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஜனசெத்த பெரமுன என்ற கட்சியின்தலைவரான முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளதுடன், இந்தஆயுதங்களைப் பயன்படுத்தியே தலைமை பௌத்த பிக்குகளை படுகொலை செய்ய தென்பகுதியில் இயங்கும் ஆயுதக் கும்பல்கள் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பௌத்த மக்களின் தலைமை பௌத்தபீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரரை நேரில் சந்தித்து இந்தமுறைப்பாட்டை பதிவுசெய்துள்ள சீலரத்ன தேரர், இதற்கு தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலானதேசிய அரசாங்கம் துணைபோவதாகவும் தெரிவித்ருக்கின்றார்.
நேரடி அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்தபிக்குகளில் ஒருவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் யூன் 15 ஆம் திகதியான வெள்ளிக்கிழமைமாலை சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் தலைமை பௌத்த பீடங்களில் ஒன்றான கண்டிஅஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வராக்காககொட சிறி புத்தரக்கித்த தேரரிடம்முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.
கதிர்காமம் கிரிவேஹர விகாரையின் தலைமை பௌத்தபிக்கு மீது அந்த விகாரையின் மயாசேன் தேவாலயலத்தின் கப்புரால துப்பாக்கிச் சூடுநடத்திய சம்பவம், பாதாள உலகக் கோஷ்டியினால் மேற்கொள்ளப்பட்டதுஎன்று தெரிவித்த சீலரத்ன தேரர், இதேபோல் நாட்டிலுள்ள மிக முக்கியமான தலைமைபௌத்த பிக்குகளை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும்ஆயுதங்கள் இருப்பதாகவும், அவற்றை கைப்பற்ற அரசாங்கம் எந்தவொருநடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரரிடம்முறையிட்ட பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அந்த ஆயுதங்களே தென்பகுதியில் மீண்டும்தலைதூக்கியுள்ள காடையர் கும்பல்களுக்கு கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
( இன்று நாட்டின்அனைத்துப் பகுதிகளிலும் காடையர் கும்பல்கள் இருக்கின்றன. அனைவர் இடத்திலும்துப்பாக்கிகள் இருக்கின்றன. பிஸ்டல் கும்பல்கள் நாடு முழுவதிலும் இயங்கிவருகின்றன. இந்த கும்பல்களை கைதுசெய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கைஎடுத்திருக்கின்றது. காடைக் குமு்பல்களைச் சேர்ந்த ஒருவனையாவது அரசாங்கம்கைதுசெய்ததா?.
இந்த வன்முறைக் கும்பல்களிடம் இருக்கும்ஆயுதங்கள் யாருடையவை. எங்கிருந்து அவற்றை இந்தக் கும்பல்கள் பெற்றுக்கொண்டன. கடந்தஆட்சியின் போது திருடப்பட்ட ஆயுதங்களா இவை?. இல்லை என்றால் இந்த ஆட்சியில்கொள்ளையடிக்கப்பட்டவையா?. இல்லை. இவர்கள் வெளிநாடுகளில் இருந்துதிருட்டுத்தனமாக ஆயுதங்களை இறக்குமதி செய்திருக்கின்றார்கள். அதேபோல்பயங்கரவாதிகளிடம் இருந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திஅப்பாவி மக்களை இந்தக் கும்பல்கள் படுகொலை செய்யப்போகின்றன.
அதனால் இவற்றைத்தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். கடந்த ஆட்சியிலும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள்என பலர் கொல்லப்பட்டனர்.. அந்த படுகொலைகள் குறித்து முறையான விசாரணைகளை நடத்திகுற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.)
நாட்டிற்கு சேவையாற்றக்கூடிய சிறந்த பௌத்ததலைமை பிக்குகளையே நாட்டில் தலைதூக்கியுள்ள ஆயுதக் கும்பல்கள் இலக்குவைத்திருப்பதாகவும் தெரிவிக்கும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர்,எனினும்இந்த கொடூரங்களை தடுக்க தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எந்தவிதநடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
(“ பௌத்த பிக்குகனை இழிவுபடுத்தும் நிகழ்வுகள் தொடர்பில்அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கத் தேரரிடம் தெளிவுபடுத்தினேன். தலைமை பௌத்த பிக்குகள்உட்பட பௌத்த பிக்குகளை படுகொலை செய்யும் நடவடிக்கைகளில் காடையர் கும்பல்கள்தயார்படுத்தப்பட்டுள்ளன. நாட்டிற்காக சேவையாற்றக்கூடிய அதேபோல் நாட்டிற்குத்தேவையான சில பௌத்த தலைமை பிக்குகளை காயடையர் கும்பல் தாக்குதல் நடத்தி வருகின்றபோதிலும், அவற்றை தடுக்க வேண்டிய அரசாங்கமோநித்திரையில் இருக்கின்றது. நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கமே பௌத்தபிக்குகளை பழிவாங்குவதற்கு காடையர் கும்பல்களை பயன்படுத்தி வருகின்றது. அதுஏனெனில் சோபித்த தேரர் உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதாககூறிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. அதேபோல் சோம தேரரின் மரணம் தொடர்பானவிசாரணைகளையும் மூடி மறைத்துவிட்டனர். அதேபோல் நாட்டிற்காக உழைத்த சிறந்த பௌத்ததலைமை பிக்குகள் கொல்லப்பட்டனர். அவர்களின் விசாரணைகளையும் மூடி மறைத்துவிட்டனர்.இன்று எனக்கும் தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் எழுத்துமூலம் முறையிட்டுஎனக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எனக்குபாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி நித்திரையில் இருக்கின்றார். அவருக்கு எமதுபாதுகாப்பு தொடர்பில் கவலைகள் இல்லை. ஆனால் ஏதாவது விபரீதம் நடந்தால்கண்துடைப்பிற்காக உடனடியாக துக்கச் செய்தியை அனுப்புவார்.
இந்த கண்துடைப்புவேலைகளை நிறுத்திவிட்டு உடனடியாக எம்மைப் போன்ற நாட்டிற்கு சேவையாற்றக்கூடியசிறந்த பௌத்த பிக்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்த நல்லாட்சிஅரசாங்கத்தின் கடமையாகும். அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். )

No comments