பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய மூவருக்கு விளக்க மறியல்!
கந்தளாயில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திய மூவரையும் கைது செய்து இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதி மன்ற நீதிவான் துசித்த தம்மிக்க, நேற்று (12) உத்தரவிட்டார்.
கந்தளாயைச் சேர்ந்த 25,30, 33 வயதுடைய மூவரே கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும், மது அருந்திவிட்டு முச்சக்கர வண்டியில் சென்ற போது, வீதிப் பாதுகாப்புக் கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர், முச்சக்கர வண்டியை நிறுத்தி, அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்ட போதே, மேற்படி மூவரும் இணைந்து பொலிஸாரை சரமாரியாக தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments